Breaking News

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள்..?

 


புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவர் கல்லூரி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இதேபோன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட உட்புற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இருப்பதில்லை,நோயாளிகளிடம் மருந்துகள் வெளியே வாங்க சொல்லப்படுகிறது, உயர்ரக மருத்துவ இயந்திரங்கள் இல்லை என தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், மருத்துவமனைக்குள் 5-க்கும்‌ மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றிதிரிவதும், அங்கு கொண்டு வரப்படும் உணவுகளை உண்பதும், நாய்களின் கழிவுகள் இருப்பதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

தெரு நாய்கள் சுற்றி வருவதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!