Breaking News

புதுச்சேரியில் நடைபெற்ற சுனாமி ஒத்திகை நிகழ்ச்சியில் இந்திய கடலோரக்காவல்படையினர், பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்..

 


கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் ஏற்ப நிலநடுக்கம் காரணமாக உருவான சுனாமி பேரலை தென் தமிழக கடலோரா மீனவ கிராமஙகளை தாக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். இதனைத்தொடர்ந்து கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டால் சுனாமி பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்து அதை முன்னெச்சரிக்கையாக மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை அரசு முன்னெடுத்தது. இதனைத்தொடர்ந்து ஆழ்கடலில் சுனாமி ஏற்பட்டால் மக்களை எப்படி காப்பாற்றுவது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து அரசு துறைகளும் எவ்வாறு எடுக்க வேண்டும் என்பதை கடலோர மாநிலங்கள் ஆண்டுக்கு முறை ஒத்திகை நிகழ்த்த வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி புதுச்சேரியில் வீராம்பட்டினம் கடலோர கிராமத்தில் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள், காவல்துறை, தீயனைப்பு துறை, இந்திய கடலோரக்காவல் படை உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் வீரம்பட்டினம் மீனவ கிராமத்தில் திரண்டனர். அங்கிருந்த மக்களை அறிவுறுத்தி உடனடியாக அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தார்கள். மேலும் படகுகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தினர். இதனைத்தொடர்ந்து அந்த குறிப்பிட்ட நேரத்தில் சுனாமி பேரலைகள் தாக்கியதாக அறிவிக்கப்பட்டது. அதன பின்பு ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, சிகிச்சையளிப்பது உள்ளிட்டவைகள் தத்துரூபமாக செய்து காட்டப்பட்டது.

இந்த பாதுகாப்பு ஒத்திகையில் அதிகாரிகள் எப்படி துரிதமாக செயல்படுகின்றார்கள் என்பதை அரசு அதிகாரிகள் பதிவு செய்தனர். மேலும் இந்த பதட்டமான அறிவிப்புகள் ஒத்திகை என அரசு அதிகாரிகள் அறிவித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தினர்.

No comments

Copying is disabled on this page!