Breaking News

தீபாவளி உதவித்தொகை ரூ.1500 வழங்காததை கண்டித்து 100கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளிகள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டம்.

 


புதுச்சேரியில் அமைப்பு சாரா நல வாரியத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், தையல் மற்றும் சமையல் கலைஞர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் ரூ.3000 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் அமைப்பு சாரா உறுப்பினர்கள் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகையை உயர்த்தி ரூ.1500 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

 கட்டிட தொழிலாளர்களுக்கு மட்டும் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆட்டோ தொழிலாளர்கள்,வீட்டு வேலை செய்யும் பெண்கள் உட்பட பலருக்கு வழங்கப்படவில்லை

இந்த நிலையில்,உதவித்தொகை வழங்க வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில்,கடற்கரை சாலை அருகே உள்ள அமைப்புசாரா தொழிலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Copying is disabled on this page!