ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.இதனையொட்டி கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவர் ஆர்.இ சேகர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நேருவின் சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர்.
No comments