ஊசுடு சட்ட மன்றத்தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் உள்ள நியாய விலை கடையில் இலவச அரிசி மற்றும் சர்க்கரையினை அமைச்சர் சாய் ஜெய சரவணன் குமார் வாங்கினார்..
புதுச்சேரி அரசு, குடிமைப் பொருள் வழங்கல் துறையின் மூலம் உசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடப்பாக்கம், சேந்தநத்தம், அரசூர், மற்றும் குருமாம்பேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு உட்பட்ட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ இலவச அரசி மற்றும் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான சாய் ஜெ சரவணகுமார் கலந்து கொண்டு இலவச அரிசி மற்றும் இலவச சர்க்கரையை பொதுமக்களுக்கு தொடங்கி வைத்தார்.
இதில், ஊசுடு தொகுதி பாஜக ஒருங்கிணைப்பாளர் சாய் தியாகராஜன், பாஜக பிரமுகர்கள் மற்றும் நியாயவிலைக் கடை ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments