ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து!
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவிக்கு அமைச்சர் கீதா ஜீவன் பாராட்டு தெரிவித்தார்.
ஆசிய செஸ் சாம்பியன் போட்டி கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. இதில் கிர்கிஸ்தான், இந்தியா, ரஷ்யா, வியட்நாம் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளி பிரிவில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, நாலாட்டியன்புதூர் ஆச்சரியா பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு பயிலும் மாணவி துர்க்காஸ்ரீ வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் 11 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த மாணவி தன்யஸ்ரீ முதலிடம் பிடித்தார். இருவேறு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவிகள் இருவரையும், தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் அழைத்து பாராட்டினார்.
நிகழ்ச்சியில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஜோ பிரகாஷ், செயலர் கற்பகவல்லி, துணைத்தலைவர் நந்தகுமார், பொருளாளர் நிக்சன், உறுப்பினர் சாந்தி மற்றும் சிகப்பி மற்றும் மாணவிகளின் பெற்றோர் உடனிருந்தனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments