ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நுண்ணுயிர் உயிரியல் பயோ டெக்னாலஜி பிஎச்டி படிப்பை தொடங்குவதற்கான ஒப்பந்தம்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் மற்றும் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நுண்ணுயிரியல் உயிரியல் மற்றும் பயோ டெக்னாலஜி ஆகியவற்றில் பிஎச்டி படிப்புகளை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தட்டுள்ளன.
அதன்படி திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் அதன் துணை வேந்தர் பேராசிரியர் ஆறுமுகம் முன்னிலையில் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் செந்தில் வேல்முருகன் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் என். பாலாஜி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து இந்த புத்துணர்வு ஒப்பந்தம் குறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர். பாலாஜி ஆகியோர் இணைந்து வரவேற்றுப் பேசுகையில் உயர்தரமான கல்வித் திறன் மேம்பாடு மற்றும் வேலைக்கான தயார் நிலை ஆகியவற்றை வழங்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும் என தெரிவித்தார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.
No comments