துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்நாளையொட்டி புதுக்கோட்டையில் மருத்துவ முகாம்: சண்முகையா எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்..
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை சண்முகையா எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நவம்பர் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கட்சியினருக்கு-வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனையொட்டி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், குமாரகிரி பஞ்சாயத்திற்குட்பட்ட புதுக்கோட்டையில், மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் இலவச கண்சிகிச்சை மற்றும் எலும்பு சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமை எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
இதில், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் ஸ்டாலின் பால்துரை, மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சண்முக நாராயணன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு தலைவர் பொன்னரசு, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சைமன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் ராஜா ஸ்டாலின், ஒன்றிய அவைத் தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய துணை செயலாளர்கள் ஹரி பாலகிருஷ்ணன், ராஜ்குமார்,துணை அமைப்பாளர் ராஜ். வடிவேல்நாதன், விஜய், ஜோசுவா, ஒன்றிய மாணவரணி சற்குணம், தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன், தொழிலாளர் அணி மொபட் ராஜன், வர்த்தக அணி பொன்செல்வன், விவசாய அணி ஜெகன் மற்றும் கிளை செயலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
செ.அந்தோணி இன்பராஜ், நிருபர், தூத்துக்குடி
No comments