தூத்துக்குடியில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு..
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகரில் பெய்து வரும் மழையால் தயால்தந்தி காலனி, அன்னை தெரசாநகர், மில்லர்புரம், பர்மாகாலனி, பால்பாண்டிநகர் மற்றும் முத்துகிருஷ்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதனை மின்மோட்டார் மூலமும், லாரிகள் மூலமும் வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு மேற்கொண்டார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளையும், பணியாளர்களையும் கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், ராமர், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments