தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வாக்காளர் சேர்க்கை முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்!
தூத்துக்குடியில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாமை மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையம் நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய 4 நாட்கள் புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் தொடங்கியது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 20வது வார்டுக்குட்பட்ட கந்தசாமிபுரம் பெத்தானியா பள்ளியில் நடைபெற்ற முகாமினை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, வட்டச்செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன், வட்டப்பிரதிநிதி அருணகிரி, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments