மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் இரவு முழுவதும் தொடர்ந்து மிதமான மழை..
மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை தொடங்கியது முதல் அவ்வப்பொழுது பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மற்றும் கனமழை பெய்தது இந்நிலையில் நேற்று தரங்கம்பாடி தாலுகா சுற்று வட்டார பகுதிகளில் பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது மாலை மழை பெய்யத் தொடங்கியது மற்றும் இரவு நள்ளிரவு தொடர்ந்து மிதமான மழை பெய்தது இன்று காலையும் தொடர்ந்து தரங்கம்பாடி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் விடாமல் மிதமான மழை பெய்து வருகிறது மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது தரங்கம்பாடி தாலுகாவில் இன்று காலை 6 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் தரங்கம்பாடியில் 59 மில்லி மீட்டர் செம்பனார்கோவிலில் 40 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளதாக தகவல்.
No comments