சிறுவந்தாடு லக்ஷ்மி நாராயண பெருமாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
புதுவை மாநிலம் அருகே உள்ள சிறுவந்தாடு லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் அஷ்ட பந்தன மகா சம்ப்ரோஷண திரு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது.
முன்னதாக புற்று மண் பூஜை, விதையிடு விழா வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை, மகா சாந்தி ஹோமம், நவ கலசம், கோ பூஜை, மகாபூர்ணா ஹூதி ஹோமம் ஆகியன நடைபெற்றது.
காலை 10 மணி அளவில் கடம் புறப்பாடு நடைபெற்று லட்சுமி நாராயண பெருமாள் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து மூலவர் லக்ஷ்மி நாராயண பெருமாள், கனகவல்லி தாயார், கோதண்ட ராமர் உட்பட பரிகார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் சிறுவந்தாடு உட்பட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் கோதண்டராமர் வீதி உலா நடைபெற்றது.
No comments