பொறையாரில் மரகத காலனி பகுதியில் பொது சுகாதார வளாகம் திறப்பு எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையார் மரகத காலனி பகுதியில் பொது சுகாதார வளாகம் திறப்பு விழா தரங்கை பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமாரவேல் தலைமையில் நடைபெற்றது.
இதில் திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு பொது சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் தரங்கை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அப்பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments