Breaking News

4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக தங்கத்தேர் செய்யும் பணியை உளியால் செதுக்கி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்.

 


புதுச்சேரி பெத்து செட்டி பேட்டையில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மரத்தில் மட்டுமே தேர் பயன்படுத்தப்பட்டு வந்தது மேலும் இந்த கோவிலுக்கு தங்கத்தேர் செய்ய வேண்டும் என்று ஆலயத்தின் நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.அதன் அடிப்படையில் தற்போது பெத்து செட்டி பேட்டை ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலுக்கு தங்கத்தேர் அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி 12.5 அடி உயரமும் 8 அடி நீளமும் 6 அடி அகலத்தில் அமைய உள்ள இந்த தங்க தேரில் சுமார் 4 கிலோ 800 கிராம் தங்கமும் 30 கிலோ காப்பர் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்கத் தேர் செய்ய பட உள்ளது.

தங்க தேர் செய்யும் பணிக்கான துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் சிறப்பு விருந்தினராக இன்று கலந்து கொண்டார். அவருக்கு ஆலயத்தின் சார்பில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் வரவேற்றார்.

தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த துணைநிலை ஆளுநருக்கு ஆலயத்தின் நிர்வாகத்தின் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.தொடர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்து கோவில் பிரகாரத்தில் வலம் வந்தார். 

இதனை அடுத்து தங்கத்தேர் செய்வதற்காக துணைநிலை ஆளுநர் சார்பில் ஆலயத்தின் நிர்வாகத்திற்கு காசோலையை வழங்கப்பட்டது. தொடர்ந்து உளியால் மரத்தை செதுக்கி தங்கத்தேர் செய்யும் பணியினை துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் , முன்னாள் சபாநாயகர் சிவகொழுந்து மற்றும் ஆலய தனி அதிகாரி பிரபாகரன் மற்றும் ஆலய தலைவர் மணி உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!