புதுச்சேரி மத்திய பல்கலை கழகத்தில் நடைபெற்று வரும் ஞான கும்ப மேளா மாநாட்டினை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் மற்றும் சிக்ஷா சம்ஸ்கிருதி உத்தன் நியாஸ் சார்பில் 'ஞான கும்ப மேளா' என்ற பெயரில் 3 நாள் தேசிய கல்வி மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழக கலாசார மற்றும் மாநாட்டு மையத்தில் நேற்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், புதுவை பல்கலைக்கழக துணை வேந்தர் தரணிகரசு ஆகியோர் குத்முவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து கலந்து கொண்டனர்.
மாநாட்டில் தேசிய தலைவர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு இந்திய அறிவுமுறைகள், பண்பாடு குறித்தும், இந்திய கல்வி முறைகள் குறித்தும் பல்வேறு கோணங்களில் ஆய்வுரை நிகழ்த்த உள்ளனர். தாய்மொழிக்கல்வியின் மூலம் ஏற்படும் அறிவு வளர்ச்சி பற்றிய கருத்துரைகளும், கற்றலில் மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலான கலந்துரையாடல்களும் நடைபெற உள்ளன.
No comments