சாலையில் விழுந்த மரம் பொது மக்களின் சிரமம் கருதி விரைந்து அப்புறப்படுத்திய சட்டமன்ற உறுப்பினர் நேரு..
புதுச்சேரி உருளையாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட செயிண்ட் தெரேஸ் வீதியில் சாலையோரம் இருந்த மரம் சாலையில் விழுந்ததில் பொது மக்கள் சிரம்மத்துக்கு உள்ளாகினர். இதனை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் நேரு @ குப்புசாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று வனத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு சாலையில் விழுந்த மரத்தினை அகற்ற உத்தரவிட்டார். நகராட்சி மற்றும் வனத்துறை ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் மற்றும் குலத்துமேடு வார்டு மனித நேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் மற்றும் இயக்க இளைஞர்கள் ஒன்று இணைந்து மரத்தினை அகற்றினர். விரைந்து நடவடிக்கை எடுத்த வனத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கும் நடவடிக்கை எடுக்க ஆணையிட்ட சட்டமன்ற உறுப்பினருக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
No comments