Breaking News

வில்லியனூர் தொகுதியில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் திட்டத்தை எதிர்கட்சி தலைவர் சிவா துவக்கி வைத்தார்..

 


புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், பசுமை புதுச்சேரி இயக்கத்தின் கீழ், தாயின் பெயரில் வீட்டுக்கு ஒரு மரக்கன்றுகள் வழங்கிட திட்டமிட்டப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழா, வில்லியனூர் தொகுதிகுட்பட்ட ஒதியம்பட்டு கிராமத்தில் இன்று காலை நடைபெற்றது.

 இதில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிவா கலந்து கொண்டு ஒவ்வொரு வீட்டிற்கும் மரக்கன்றுகள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் வீடு வீடாக சென்று கொய்யா, மா, பலா, நாவல், எலுமிச்சை, நெல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக் கன்றுகளை வழங்கினர்.


இந்நிகழ்ச்சியில்,மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், சுற்றுச்சூழல் உதவி பொறியாளரர் தேவநாதன், திட்ட அதிகாரிகள் பன்னீர்செல்வம், சாந்தலட்சுமி, விமல்ராஜ், தினேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொகுதி திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!