Breaking News

தூத்துக்குடி: கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட பணிகளை வேளாண் இணை இயக்கநர் ஆய்வு..

 


தூத்துக்குடியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப்பணிகளை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநார் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களான கோரம்பள்ளம், கட்டாலங்குளம், அல்லிக்களம் மற்றும் உமரிக்கோட்டை ஆகிய 4 கிராமங்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மைத்துறை மூலம் தனிப்பட்ட விவசாயிகளின் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தரிசு நிலத்தில் சீமைக்கருவேல மரங்கள், மரங்கள் மற்றும் சிறுகற்கள் போன்றவற்றை அகற்றுவதற்காகவும், நிலத்தை சமன் செய்து உழவு மேற்கொள்ள ஹெக்டருக்கு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.9600 வரை பின்னேற்பு மானியமாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தில் ஒரு விவசாயி அதிகபட்சமாக 2 ஹெக்டர் வரை பயன்பெறலாம். இத்திட்டப்பணிகளை தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி ஆய்வு செய்து, விவசாயிகளிடையே தொழில்நுட்பக் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

ஆய்வின்போது, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கண்ணன், வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ், உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

No comments

Copying is disabled on this page!