Breaking News

உளுந்தூர்பேட்டை அரசு மாணவியர் விடுதி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்ட நலத்துறை ஆணையர் ஆய்வு..

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மகளிர் மாணவியர் விடுதியில் பிற்படுத்தப்பட்ட நலத்துறை ஆணையரும் வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளருமான வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டு மாணவிகளிடம் விடுதியில் உணவு தரமாக வழங்கப்படுகிறதா வாரந்தோறும் இறைச்சி வழங்கப்படுகின்றதா என்று கேட்டறிந்தார். மாணவிகள் சரியாக வழங்கப்படுகிறது. என்று பதில் கூறினார்கள் மேலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் திருக்கோவிலூர் உதவி ஆட்சியர் ஆனந்தகுமார் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன் தேர்தல் துணை வட்டாட்சியர் ஷீலா ராணி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் சத்யராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!