தந்தை பெரியார் மேல்நிலைப்பள்ளி அரியாங்குப்பம் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் எல்.பி.ஜி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி..
இந்திரா இண்டன் சர்வீஸ் மற்றும் தந்தை பெரியார் மேல்நிலைப்பள்ளியின் அரியாங்குப்பம் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டர் கையாள்வது மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் விஜயா தலைமை தாங்கினார் .
NSS நிகழ்ச்சி அதிகாரி பார்த்தி, விரிவுரையாளர்கள் சுப்ரமணியன், கார்த்திகேயன், குணவதி, நூலக அலுவலர் ஐயப்பன், இந்திரா இண்டேன் சர்வீஸ் மேலாளர் உமா,
ஆகியோர் மாணவிகளுக்கு LPG பாதுகாப்பு பற்றி விளக்கினர். இவ்விழாவில் இந்திரா இண்டன் சர்வீஸ் பரசுராமன், மாநில NSS அதிகாரி சதிஷ்குமார், மற்றும் முன்னாள் ஆசிரியர் தேசிய விருதாளர் ஆசிரியர் திலகவதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவின் ஏற்பாடுகளை பள்ளியின் NSS அதிாரிகள் செய்திருந்தனர். இதில் 90 க்கும் மேற்பட்டோர் மாணவிகள் பங்கு பெற்று பயனடைந்தனர்.
No comments