தன்னைவிட வயதில் சிறியவரான லாட்டரி தொழிலதிபரின் காலில் சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் விழுந்த சம்பவம்...
புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தனி தொகுதியான திருபுவனையில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அங்காளன். இவர் முன்னாள் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காமராஜர் நகர் தொகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த லாட்டரி தொழிலதிபரின் மகன் சார்லஸ் மார்ட்டினிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு திடீரென காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தன்னைவிட சிறியவரான தொழிலதிபரின் காலில் சுயேட்சை எம்எல்ஏ விழுந்த சம்பவம் புதுச்சேரி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments