தூத்துக்குடியில் தொடர் மழை: தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை..
தூத்துக்குடி மாநகரில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக பாளை ரோடு, தபால்தந்தி காலணி, விஎம்எஸ்.நகர், லூர்தம்மாள்புரம், செயின்ட் மேரிஸ் காலணி, திருவள்ளூவர்நகர், கலைஞர்நகர், முத்தையாபுரம் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கியது. மழைநீர் தேங்கிய இடங்களில் அவைகளை உடனடியாக வெளியேற்றுவதற்கான அனைத்து பணிகளையும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மேற்கொண்டார். அதனையடுத்து மழைநீர் வெளியேற்றும் பணிகளை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளரும், வடக்கு மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், போல்பேட்டை திமுக பிரதிநிதி ஜேஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments