தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ128.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை திறப்பு விழா.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டம் 2022 திட்டத்தின் கீழ் 6 புதிய வகுப்பறை கட்டிடம் ரூ 128.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தினை இன்று காலை 11 மணியளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக தாமலேரிமுத்தூர் பள்ளி வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள். உடன் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜ் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்தியா சதீஷ்குமார் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் க. உமா கன்ரங்கம் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
No comments