இசை மற்றும் நடன கச்சேரிகளை நேரில் கேட்டால் மட்டுமே ரசனையும் அனுபவமும் கிடைக்கும் என்று கோவையில் நடைபெற்ற ஸ்ரீ மாருதி கான சாபாவின் துவக்க விழாவில் கலந்துகொண்ட கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒலி, ஒளி அமைப்புடன் கூடிய ஶ்ரீ மாருதி கான சபா அரங்கம் கோவை வாழ் இசை மற்றும் நடனத்துறை கலைஞர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக ஶ்ரீ மாருதி கான சபா நிர்வாகிகளான மிருதங்க கலைஞர் மாயவரம் விஸ்வநாதன் மற்றும் ஒலி,ஒளி தொழில்நுட்ப வல்லுநர் கிருஷ்ணன் முருகன் ஆகியோர் தெரிவித்தனர். மேலும் கோவை வாழ் மக்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் ஶ்ரீ மாருதி கான சபாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களால் இசை, நடனம் மற்றும் களரி பயிற்று போன்ற மனம் மற்றும் உடல் நலம் பேணும் கலைகள் கற்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இசை மற்றும் கலைஞர்கள், ஶ்ரீ மாருதி கான சபாவில் நடனம் இசை கலை மற்றும் இசை வாத்தியங்களுக்கு பயிற்சி அளிக்கப் போவதாகவும் அதேபோல் மாதம்தோறும் இசை மற்றும் நடன கச்சேரி அரங்கேற்ற போவதாகவும் தெரிவித்தனர். அதேபோல பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு youtube, தொலைக்காட்சி மூலம் இசை, நடன கச்சேரிகளை பார்ப்பதற்கு பதிலால நேரில் வந்து அதனைப் பார்க்கும் போது உணர்ச்சிபூர்வமாக இருக்கும் என்றும் வலைதளங்களில் மூலமாக பார்க்கும் போது அதில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாது எனவும் தெரிவித்தவர்கள்.
இசை மற்றும் நடன கச்சேரிகளை நேரில் சென்று பார்த்து, கேட்டால் மட்டுமே அதனின் ரசனை உணர்வுபூர்வமாக அறிய முடியும் என்றும் தற்போதைய தலைமுறைகள் அனைத்தையும் வலைதளங்கள் மூலம் கற்பிப்பதால் எந்தவிதமான பலனும் கிடைக்காது என்று கூறினர்.
No comments