இந்திய அளவில், எந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இது போன்ற ஸ்கேன் கருவிகள் கிடையாது..!!முதல்வர் ரங்கசாமி பெருமிதம்.
புதுச்சேரி சுகாதார துறை சார்பில், பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்பிணி தாய்மார்களின் நலன் கருதி, பிரசவத்திற்கு முந்தைய பராமறிப்பு உறுதிப்படுத்தும் திட்டத்தீன் கீழ், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், இ.சி.ஜி., கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நடந்தது. விழாவில், சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ஆனந்தலட்சுமி வரவேற்றார். இயக்குனர் டாக்டர் செவ்வேல் முன்னிலை வகித்தார்.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், மற்றும் இ.சி.ஜி. கருவிகளை பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்த வைத்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சரங்கசாமி,
இந்திய அளவில், எந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இது போன்ற ஸ்கேன் கருவிகள் கிடையாது. இந்தியாவில் புதுச்சேரியில் தான் முதல் முறையாக, ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி தாய்மார்களின் நலனுக்காக ஸ்கேன் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது.இதன் மூலமாக, புதுச்சேரி அரசு எந்த அளவிற்கு சுகாதார துறையில் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் டாக்டர் ஆனந்தவேல், மருத்துவர்கள், செவிலியர்கள்,ஆஷா பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments