உளுந்தூர்பேட்டை காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகளை கைது..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல்நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஓம் கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் விருத்தாச்சலம் சாலையில் இருந்து பேரணையாக வந்து கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பொறியாளர் தாருவேதா ஏழுமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் முன்பு தொடங்கிய நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்படாத நிலையில் 30 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
No comments