தரங்கம்பாடி தாலுக்காவில் கொட்டி தீர்க்கும் அதிக கனமழை பழமையான வீடு இடிந்து விழுந்தது வருவாய்த்துறை நேரில் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது தரங்கம்பாடி மற்றும் பொறையார் தில்லையாடி திருக்களாச்சேரி திருக்கடையூர் மற்றும் கடலோரப் பகுதிகளில் அதிக கனமழையும் பெய்து வருகிறது பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது பல்வேறு பகுதிகளில்
குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது இந்நிலையில் திருக்களாச்சேரி ஊராட்சி பாலூர் கிராமம் தெற்கு தெருவில் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலான பெரிய பழமையான வீடு கனமழை காரணமாக திடீரென இடிந்து விழுந்தது முன் பகுதிகள் முழுவதும் இடிந்து விழுந்தது வீடு இடிந்து.
அருகில் இருந்த மின்கம்பிகள் மீது விழுந்து மின்கம்பிகளும் அறுந்தது அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை இந்த பழமையான வீட்டில் பொன்னுதுரை, லலிதா உள்ளிட்ட மூன்று குடும்பத்தினர் வீட்டின் பின்பகுதியில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர் இந்நிலையில் விபத்து குறித்து வருவாய்த்துறை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர் வீட்டில் குடியிருந்தவர்களை பாதுகாப்பாக மாற்று இடத்திற்கு அப்புறப்படுத்தினர் பழமையான வீடு திடீரென இடிந்து விழுவதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
No comments