தரங்கம்பாடியில் தொடர்ந்து கனமழை,பாதுகாப்பு மையங்கள் தயார். கூடுதல் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி மற்றும் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது தரங்கம்பாடி தாலுகாவில் இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் மேலும் மழை நீடித்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தரங்கம்பாடியில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் தனியார் மண்டபத்தில் தங்கி உள்ளனர்.
இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா மாணிக்க பங்கு ஊராட்சி பகுதியில் கடல் நீர் கடல் சீற்றம் காரணமாக உட்புகுவதை தடுக்கும் வகையில் ஜேசிபி இயந்திரம் மூலம் முகத்துவாரம் தூர்வாரும் பணியும் நடைபெற்றது அதேபோன்று மாணிக்க பங்கு பகுதியில் பொதுமக்கள் தங்குவதற்காக புயல் பாதுகாப்பு மையம் தயார் நிலையில் உள்ளது இன்று கூடுதல் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது மாணிக்க பங்கு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் ஊராட்சி செயலர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments