உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தில் இன்று காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதல்வர் 2 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டான பள்ளி கட்டிடத்தை தொடக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 2019 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது இதைத் தொடர்ந்து போதுமான கட்டிடங்கள் இல்லாததால் அந்த பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் உயர்நிலைப் பள்ளிக்கான கட்டிடம் கட்ட அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் சுமார் 2 கொடியே 5 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்ற நிலையில் கட்டுமான பணி நிறைவடைந்தது 8 வகுப்பறை மற்றும் ஆய்வுக்கூடம் கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை மூலம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு பள்ளிகளின் கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் தொடர்ந்து பாண்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் புதிய கட்டிடதை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் குத்து விளக்கை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு தலைவர் ராஜவேல், பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்தரசன், மாவட்ட கவுன்சிலர் ப்ரியா பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராஜேந்திரன், துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயக்குமார், மணிகண்டன், நகர மன்ற உறுப்பினர் செல்வகுமாரி இரமேஷ்பாபு, உதவி தலைமை ஆசிரியை அமலி காந்திமதி, நல்லாசிரியர் அருணா சூரியகுமார், மேலும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments