முத்தையஸ்வாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்..
முருகப் பெருமானுக்கு இருக்கப்படும் விரதங்களில் மிக கடுமையானது கந்தசஷ்டி விரதம் தான். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளையும், வள்ளி-தெய்வசேனா சமேத முருகப் பெருமானுக்கு 08ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.
இதனையடுத்து புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் முத்தையாஸ்வாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. விழாவை தொடர்ந்து தினந்தோறும் சண்முக பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிப்பட்ட சண்முகத்திற்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர்.
No comments