ஏழுமலையான் கோவிலுக்கான அன்னதான கூடம் கட்டிடம் கட்டுமான பணியை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருச்சி - சேலம் ரவுண்டானா சாலை அருகில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோவில் ரூபாய் 20 கோடியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கோவிலுக்கான அன்னதான கூடம் ரூபாய் இரண்டு கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது
இதற்காக பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாகம் நடத்தப்பட்டது பின்னர் நடைபெற்ற பூமி பூஜையில் முன்னால் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு வேத மந்திரங்கள் ஓத மங்கள வாத்தியங்கள் முழங்க பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தேவஸ்தான போடு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments