வில்லியனூர் தொகுதியில் 41 பயனாளிகளுக்கு வீடுகட்டும் தவணைத் தொகை ஆணையினை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பயனாளிகளுக்கு வழங்கினார்.
குடிசைமாற்று வாரியம் மூலம் வில்லியனூர் தொகுதியை சேர்ந்த 41 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் விதம் மொத்தம் 33 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வீடு கட்டும் முதல் மற்றும் மூன்றாம் தவணை தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தியதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடு கட்டும் தொகைக்கான ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குடிசைமாற்று வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன், உதவி பொறியாளர் ரவி, இடைநிலைப் பொறியாளர் அணில் குமார் மற்றும் தொகுதி திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments