ஓசை தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஐந்தாயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா.
திருப்பத்தூர் மாவட்டம் சி.கே.ஆசிரமம் பகுதியில் செயல்பட்டு வரும் ஓசை தொண்டு நிறுவனத்தின் சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகளை நடும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவனத்தில் நிறுவனர் மற்றும் தலைவர் இயற்கை ஆர்வலர் விஜி தலைமையேற்று மரக்கன்றுகளை வழங்கினார். செயலாளர் டாக்டர் அருள் அனைவரையும் வரவேற்று பேசினார். பொருளாளர் கோகுல் வாழ்த்துரை வழங்கினார்.
ஓசை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பேசுகையில்: இந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அதிகமான மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். மேலும் நீர்நிலைகளை பாதுகாத்து பசுமையான மாவட்டமாக மாற்ற வேண்டும். நதி நீரை இணைத்தல், திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாத்து வளமான பூமியாக மாற்றுவதே நோக்கமாக கொண்டுள்ளோம் மேலும் ஓசை தொண்டு நிறுவன நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments