ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதல் வளர்ச்சி குழுவின் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக பல்வேறு நலத்திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் ரூ. 488 கோடி புதுச்சேரி அரசால் நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 துறைகள் மூலம் ஆதிதிராவிட மக்களுக்கான நலத்திட்டங்கள் செவ்வனே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களை கண்காணிக்கவும், ஆதிதிராவிடர் சிறப்புக் கூறு நிதி சரியாக செலவிடப்படுவதை உறுதிப்படுத்தவும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான மாநில அளவிலான ஆதிதிராவிடர் வளர்ச்சிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் சிறப்புக் கூறு நிதியை நடப்பாண்டிற்குள் விரைந்து செலவு செய்யவும், திட்டங்கள் சரியான முறையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சென்றடையவும் அரசுத்துறைகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் சாய் ஜெ. சரவணன் குமார், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments