Breaking News

சீர்காழியில் சாலை பாதுகாப்பு மற்றும் அதிக விபத்துக்களை தடுக்கும் வகையில் பொறியியல் தீர்வு விழிப்புணர்வு போட்டிகள்..


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி ஆணைக்கிணங்க சாலை பாதுகாப்பு மற்றும் அதிக விபத்து ஏற்படும் இடங்களில் பொறியியல் முறையில் தீர்வு காணுவது தொடர்பான மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கு பெற்ற மாபெரும் விழிப்புணர்வு போட்டிகள் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.        

 இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட தனியார் பள்ளிகளின் முதன்மை கல்வி அலுவலர் நிர்மலாராணி தலைமை வைத்தார். பெஸ்ட் கல்வி நிறுவனத் தாளாளர் எஸ். எஸ் .என். ராஜ்கமல் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி குறித்து பேசுவதில்.... சாலைகளில் எவ்வாறு பாதுகாப்பாக நடந்து செல்வது மற்றும் வாகனங்களை ஓட்டும்போது சாலை விதிகளை எவ்வாறு மதித்து நடப்பது, தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது கூடாது, குடித்துவிட்டு வாகனம் ஓட்ட கூடாது என்றும் இந்த விதிமுறைகளை வீட்டில் உள்ள உறுப்பினர்களுக்கும் விளக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மத்தியில் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக கொள்ளிடம் சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் கனகசபை நன்றி கூறினார். விழிப்புணர்வு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்..

No comments

Copying is disabled on this page!