சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி, விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களை பாதுகாத்தவர் எடப்பாடியார் மட்டுமே..!!
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்,
மத்திய அரசிடம் இருந்து மாநில உரிமைகளை பெறுவதிலும், மாநில சீர்கேடுகளை தடுத்து நிறுத்தவதிலும் புதுச்சேரி அரசு முழுமையாக தவறியுள்ளது.மாநில அந்தஸ்து சம்பந்தமான சட்டமன்ற தீர்மானத்தை முழுமையாக கிடப்பில் போட்டுவிட்டார்கள்.நாடு முழுவதும் 16-வது நிதிக்குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள நிலையில்,புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மத்திய நிதிக்குழுவில் சேர்ப்பதற்கான உரிய நடவடிக்கையை துணை நிலை ஆளுநர் உடனடியாக எடுக்க வேண்டும்.துணை நிலை ஆளுநர், முதல்வர்,சபாநாயகர் ஆகிய மூவரும் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி மாநிலத்தை உடனடியாக சேர்க்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும், தமிழகத்தில் அனைத்து டெல்டா மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவித்து சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி, விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களை பாதுகாத்தவர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி மட்டுமே என்றும், அவரைப் பற்றி விமர்சிக்க திமுகவிற்கு தகுதி இல்லை என்றார்.
No comments