புதுச்சேரியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியாத சூழல் உருவாகி உள்ளது.
புதுச்சேரியில் நேற்று இரவு மழை லேசான பெய்ய தொடங்கிய நிலையில், நள்ளிரவு கனமழை பெய்தது. தற்போது வரை 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக, ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது பாதிக்கப்படும் இடங்களான வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், பாவாணன் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீ சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.மேலும் வேலைக்கு செல்பவர்கள்,வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்
நேற்று இரவு முதல் கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடுமுறை அளிக்கவில்லை.இதனால் மழையில் நனைந்தபடியே மாணவர்கள், பெற்றோர்கள் சென்றதால் மிகவும் அவதியுற்றனர்.
முதல்வர், கல்வித்துறை அமைச்சர்,மாவட்ட ஆட்சியர்,கல்வித்துறை இயக்குனர் என ஒவ்வொரு முறையும் ஒருவர் விடுமுறை அறிவிப்பை வெளியிடுவதால் மழை காலங்களில் விடுமுறையை யார் அறிவிப்பார் என்ற குழப்பம் நிலவுகிறது என்றும்,புதுச்சேரியில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
No comments