மயிலாடுதுறை அருகே கனமழை காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு மயிலாடுதுறை , குத்தாலம் ,தரங்கம்பாடி ,சீர்காழி ஆகிய நான்கு தாலுகா பகுதிகளிலும் 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி நடவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குளிச்சார் ஊராட்சியில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து உள்ளனர். கடந்த ஐந்தாம் தேதி பெய்த மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் விவசாயிகள் எம்எல்ஏ அதிகாரிகளிடம் மனு அளித்து புதர்மண்டி கிடந்த குளிச்சார் வடிகால் வாய்க்காலை தூர்வாரி தர மனு அளித்த நிலையில் அங்கு ஜேசிபி எந்திரம் மூலம் தூர்வாரும் பணி தொடங்கியது இரண்டு நாட்கள் மட்டுமே தூர்வாரி விட்டு கிடப்பில் போட்டதால் தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் நடவு நட்டு 25 நாட்களாக சுமார் 150 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி வெள்ளக்காடக காட்சியளிக்கிறது.
25 நாட்களுக்கு மேலாக இந்த இளம் பயிர்கள் தண்ணீரில் கிடப்பதால் அழுகி வீணாகிவிடும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் மேலும் ஏக்கருக்கு சுமார் 35 ஆயிரம் செலவு செய்து தற்போது பெய்து வரும் தொடர் மழையால் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த பகுதியில் உள்ள குளிச்சார் வடிகால் வாய்க்காலை வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து வாய்க்காலை உடனடியாக தூர்வாரி தர வேண்டும் என்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments