நாய் கடித்ததால் மூதாட்டி மருத்துவமனையின் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் மனைவி அஞ்சலை வயது 80. அஞ்சலையின் கணவர் வைத்தியநாதன் உயிரிழந்து 40 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அஞ்சலை படுத்த படுக்கையாக தனது வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் அஞ்சலையை தெருநாய் ஒன்று கடித்து குதறி உள்ளது.
இதில் படுகாயம் அடைந்த அவர் அலறித் துடித்த நிலையில் ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அஞ்சலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments