வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆய்வு..
வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தம் செய்யும் பணி ஜனவரி 1 என்ற தேதியை தகுதி பெறும் நாளாக கொண்டு பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணியானது வரைவு வாக்காளர் பட்டியலுடன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது.
மேலும்,அப்பணி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கான சிறப்பு முகாம் புதுச்சேரியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று தொடங்கி 2 நாட்கள் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளால் நடைபெற்று வருகின்றன.
இப்பணியினை மாவட்ட தேர்தல் அதிகாரியும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் பல்வேறு மையங்களில் ஆய்வு மேற்கொண்டு நடைபெறும் பணிகளை பார்வையிட்டார்.
No comments