வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கல்,திருத்த முகாமினை மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குதல், சேர்த்தல், திருத்தம் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நேரில் சென்று ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது…
இந்திய தேர்தல் ஆணையத்தில் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் செய்வது தொடர்பான முகாம்கள் 160.சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகளும், 161.மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளும், 162.பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடிகளிலும் இன்று (16.11.2024) நடைபெறுகிறது. அதேபோன்று நாளை (17.11.2024) ஞாயிற்றுக்கிழமை மற்றும் 23.11.2024 (சனிக்கிழமை), 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இந்நாட்களில் தகுதியான வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பெயரினை எவ்வித விடுபாடுமின்றி பட்டியலில் சேர்த்திட ஏதுவாக படிவம் 6 விண்ணப்பம் அளித்திடவும், இறந்துபோன வாக்காளர்களை நீக்கம் செய்திட படிவம் 7-இல் விண்ணப்பித்தும், வேறு வாக்குச்சாவடிகளுக்கோ, வேறு சட்டமன்ற தொகுதிகளுக்கோ அல்லது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றில் திருத்தம் செய்திட படிவம் 8-இல் விண்ணப்பித்தும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்,சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி உள்ளனர்.
No comments