மிர்ரா அல்பாஸா அன்னையின் 51-ஆவது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சமாதியில் பக்தா்கள் வழிபட்டனா்.
புதுச்சேரியில் அரவிந்தா் ஆசிரமம் உள்ளது. அரவிந்தா் ஆன்மிக வழியை பின்பற்றி பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த மிர்ரா அல்பாஸா புதுச்சேரி வந்து ஆசிரமத்தில் தங்கினாா். அவா் அரவிந்தா் ஆசிரமம் மற்றும் ஆரோவில் நகரை ஏற்படுத்தினாா். அவரை பக்தா்கள் ஸ்ரீஅன்னை என்றே அழைக்கின்றனா்.
புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் பகுதியில் உள்ள அரவிந்தா் வாழ்ந்த ஆசிரமத்தில் வாழ்ந்த மிர்ரா அல்பாஸா, கடந்த 1973-ஆம் ஆண்டு நவம்பா் 17-ஆம் தேதி மகாசமாதி நிலையை அடைந்தாா். அவரது மகாசமாதி தினத்தன்றுதான் அரவிந்தா் ஆசிரமத்துக்குள் பொதுமக்கள், பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், மிர்ரா அல்பாஸா அன்னையின் 51-ஆவது நினைவு தினத்தையொட்டி, நூற்றுக்கணக்கான பக்தா்கள் வரிசையாக நின்று சென்று ஆசிரமத்துக்குள் அன்னை மகாசமாதியில் மலா்களைத் தூவி வழிபட்டனா். அங்கு கூட்டுத் தியானமும் நடைபெற்றது.மேலும் பக்தா்களும், வெளிநாட்டு, வெளி மாநில சுற்றுலாப் பயணிகளும் அரவிந்தா் ஆசிரமத்துக்குள் அன்னை சமாதியை வழிபட அனுமதிக்கப்பட்டனா்.
No comments