கடலூர் விவகாரம்; விசிகவினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்.
வாணியம்பாடி எல்ஐசி அலுவலகம் எதிரில் பாமக கட்சியினர் மஞ்சக்கொலை செல்லதுறையை கொலைவெறியாக தாக்கியதும் கொலை மிரட்டல் விடுத்த வி.சி.கா. கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி! பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி எல் ஐ சி அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் பஞ்சு கொள்ளை குப்பம் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை விசிகாவினர் 21 பேர் சாரா மாறியாக தாக்கி உள்ளனர்.
மஞ்சக்கொல்லை செல்லத்துரையை கொடூரமாக தாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம்; வன்னியர்கள் இன்னும் 42 ஆண்டுகளுக்கு எங்களிடம் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் உரிய சட்டப்பிரிவுகளில் கைது செய்வது மட்டுமின்றி, பொது அமைதியை குலைக்க முயன்றதற்காக அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். என்று கண்டன உரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சி வாணியம்பாடி நகர செயலாளர் அன்பரசு முன்னிலையில், நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்கம் நிர்வாகிகள் பாமக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் பு.லோகேஷ்
No comments