Breaking News

கடலூர் விவகாரம் : நெமிலி பேருந்து நிலையத்தில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்.


கடலூர் மாவட்டத்தில் நடந்த வன்முறையை கண்டித்தும் வன்னியர் சங்கம் மாநிலத் தலைவர் மற்றும் மாவட்ட செயலாளருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தும் வரும் நபரை கைது செய்யக்கோரி ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில்  கிழக்கு மாவட்ட பாமக சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு முற்பட்ட போது ஆர்ப்பாட்டக்காரருக்கும்  காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது,மாநில வன்னியர் சங்கத் தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் 100 கும் மேற்பட்டோர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் விடுதலை சிறுத்தைகளின் கட்சி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்டனர்.

அப்பொழுது போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்பு போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Copying is disabled on this page!