புதுச்சேரி அரசின் செயல்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் அறிவிக்கை - 2019 மீனவர் கிராமத்தில் அளவிட்டு நிலங்களை கையகப்படுத்தும் புதுச்சேரி அரசின் செயல்களை கண்டித்தும்
முழுமை பெறாத கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் வரைவு மீது நடைபெற உள்ள கருத்துக்கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய கோரியும்
காரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்களில் அடிப்படை வசதிகளான, தட்டுப்பாடுயின்றி சுத்தமான குடிநீர், வீடற்ற மக்களுக்கு குடிமனைப்பட்டா, தடையற்ற மின்சாரம், தரமான சாலைகள் என அனைத்தையும் செய்து தர வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட செயலாளர் தமிழ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமல்ல அது மீனவ பெண்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் நடத்தியவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது "கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் அறிவிக்கை 2019 பெயரில் கடல் & கடற்கரையை மட்டுமே நம்பி வாழும் மீனவ மக்களை முற்றாக அப்புறப்படுத்தவும், மழை, வெள்ளம், புயல், கடல் அரிப்பு போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்க உருவான இயற்கை காடுகள், மணல் திட்டுக்கள் மற்றும் கடற்கரை சூழவியல் அழித்து சுற்றலா என்ற பெயரில் கார்ப்ரேட் நிறுவனங்களிடம் கடற்கரையை ஒப்படைக்கும் கொடிய திட்டத்தை விதி முறைகளை மீறி மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த முனைவதாவும், இது போல கடற்கரையின் இயற்கை சூழவியலை அழித்தால் கடற்கரையை நம்பி வாழும் மீனவ மக்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல, புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும்ம் பாதிப்பு ஏற்படும் எனவே முழுமையான கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் வரைவை கொண்டு வந்து பின்னர் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்."
No comments