Breaking News

பணி நிரந்தரம் செய்ய கோரி தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்..

 


புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகமான பி.ஆர்.டி.சியில் கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரியும் மகளிர் நடத்துனர்களையும், 10 ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், எம்.ஏ.சி.பி பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை அரசு இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகமான பி.ஆர்.டி.சியில் பணிபுரியும் தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் பணிமனை முன்பு தொடர் காலவரையற்ற உண்ணாவிரப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வேலை நிறுத்தம் உள்ளிட்ட தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!