கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்தை ஆய்வு செய்த டிஐஜி சத்திய சுந்தரம், அங்கு பணிபுரியும் காவலர்களுக்கு ஹெல்மெட் வழங்கினார்.
புதுசசேரி டிஐஜி சத்தியசுந்தரம் பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக நேரு வீதியில் உள்ள கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், எஸ்பி அலுவலகத்தின் 2வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
போக்குவரத்து சீனியர் எஸ்பி பிரவீன் குமார் திரிபாதி, போக்குவரத்து வடக்கு கிழக்கு பிரிவு எஸ்பி செல்வம், இன்ஸ்பெக்டர்கள் நாக ராஜ் (கிழக்கு), சுரேஷ் பாபு (வடக்கு) மற்றும் எஸ்ஐக்கள் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது எங்கெங்கு போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகமாக ஏற்படுகிறது. போக்குவரத்து போலீ சாரின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து வீடியோ படக்காட்சிகள் மூலமாக டிஐஜிக்கு எடுத்துரைத்தனர். அப்போது அவர், விபத்துக்களை குறைக்கவும். நெரிசலை போக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, போக்குவரத்து போலீசாருக்கு காவல் துறை சார்பில் ஹெல்மெட்களை டிஐஜி வழங்கினார். போக்குவரத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட போலீசாருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. நெரிசல் மிகுந்த நேரங்களில் பாதுகாப்புக்காகவும் மழை காலங்களில் பயனுள்ளதாகவும் இந்த ஹெல்மெட் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments