மீஞ்சூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் கிராமத்தை சேர்ந்த கண்ணன் சுமார் 10க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று வழக்கம் போல மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற போது மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து 3மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. சுமார் 75000ரூபாய் மதிப்பிலான மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
No comments