கவரிங் நகை கடைக்குள் புகுந்து சிகரெட் பற்றவைக்க வத்திபெட்டி கேட்டு அங்கிருந்த பெண்களை ஆபாசமாக பேசி மர்ம நபர் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ..
புதுச்சேரி ரெயின்போ நகர் அருகே 45 அடி சாலையில் நிவா பிரைடல் என்ற கவரிங் நகை கடை இயங்கி வருகிறது. இங்கு 3-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் மது போதையில் கடைக்குள் நுழைந்த நபர், அங்கு வேலை பார்க்கும் பெண்களை பேபி ( Babe ) என்று அழைத்து அவர்களிடம் வம்பிழுக்கும் சம்பவம் நடந்துள்ளது.
சிகரெட்டை பற்றவைக்க வத்திப்பெட்டி தரவில்லை என்றால் கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுவதும், ஆபாசமாக கொச்சையாக பேசுவதும் அரங்கேறியுள்ளது.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் போதை கலாச்சாரத்தால் பெண்களின் பாதுகாப்பு மிக மோசமாக மாறி வரும் நிலையில், கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டுமென கோரிக்கை குரல் எழுந்துள்ளது.
No comments