Breaking News

பரோல் அனுமதி தரப்படாததால் சமைப்பதை நிறுத்தி தண்டனை கைதிகள் போராட்டம்..?

 


புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் மத்திய சிறையிலிருந்து பரோலில் வந்த பிரபல ரவுடி கர்ணா குடும்பத்தினருடன் மாயமானார். அதையடுத்து போலீஸார் அவரை பிடித்தனர். அதிலிருந்து தண்டனை கைதிகளுக்கு பரோல் கிடைப்பதில்லை. தற்போது மத்திய சிறையில் 150-க்கும் மேற்பட்ட தண்டனை சிறைவாசிகள் இருக்கின்றனர்.

அவர்கள் பரோல் கிடைக்காததால் இன்று முதல் சமைப்பதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் சாப்பிடவும் இல்லை என தெரிகிறது. பரோல் கிடைக்காதது, நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சிறைத்துறையினர் விசாரணை கைதிகள் மூலம் சமையல் பணிகளை செய்துள்ளனர். ஆனால் தண்டனை சிறைவாசிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக உணவும் உண்ணமறுப்பு தெரிவித்து உண்ணாவிரத்தையும் துவக்கியுள்ளனர். இதுபற்றி விவரங்களை காவல்துறை தலைமையகத்துக்கு சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!